விராட் கோலி கடந்த 2008ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அதே ஆண்டில் U -19 உலக கோப்பை போட்டிக்காக கேப்டன் கோலி தலைமையில் களம் கண்ட இந்திய அணி கோப்பை கைப்பற்றி அசத்தியது.
ஆரம்பத்தில் கோலியின் ஆட்டத்தை கவனித்த கிரிக்கெட் ஜாம்பவான்கள் அவரை 'ரன் மெஷின்' என்று அழைத்தனர். படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு இந்திய அணியின் கேப்டனாக உருவெடுத்துள்ளார்.
தற்போது கேப்டன் கோலியை பற்றிய புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், கேப்டன் கோலி பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி, 2ம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் எதிர் கொள்கிறது.
இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள உள்ளது.