இந்திய கிரிக்கெட் இரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! வாட்டி வதைத்த கொரோனாவை, வதக்கி எடுத்து வெளியே வந்த வீரர்கள்!
கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் நிலையிலும், ஐபிஎல் போட்டிகளுக்கு இடையில் சில வீரா்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ஐபிஎல் 2021 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டி 24நாட்களில் முடித்துக்கொள்ளப்பட்டது.
மொத்தம் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. முதன் முறையாக மே 4 அன்று சஹா, அமித் மிஸ்ரா ஆகியோருக்கு தொற்று உறுதியானது. அந்த நாளன்றுதான் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மே 8 அன்று பிரசித் கிருஷ்ணா பாதிக்கப்பட்டார்.
தற்போது மூவரும் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். சஹாவும், மிஸ்ராவும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்கள். பிரசித் கிருஷ்ணாவும் கரோனாவிலிருந்து குணமாகிவிட்டதாக அவரது தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில நாள்கள் குடும்பத்தினருடன் தங்கிவிட்டு மும்பைக்கு வருவதாக சஹா வைத்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சஹாவும் பிரசித் கிருஷ்ணாவும் இடம்பெற்றுள்ளார்கள். மும்பையில் வசிக்கும் வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் மும்பையில் மே19முதல் இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.