வந்துட்டேன்னு சொல்லு! போன அதே பார்ம்ல திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! சிங்கக்குட்டி மாதிரி சீறிப்பாயும் நடராஜன்!

Update: 2021-05-19 11:22 GMT

ஐபிஎல் மூலமாக புகழ் வெளிச்சம் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனுக்கு, எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டியதாக போனது. அதன் பின்னர் இப்போது வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அவர் ‘ஒவ்வொரு நாளும் வலிமையுடன் மீண்டு வருகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டகிரம் தளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவது போல் வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அந்த வீடியோவுக்கு கீழ் நடராஜன், நான் ஒவ்வொரு நாளும் முன்பை விட புதிதாக எழுகிறேன் எனக் கூறியிருந்தார்.

மேலும் முன்பைவிட என்னை நான் பலப்படுத்திக் கொண்டு, மீண்டும் அதே உத்வேகத்துடன் ஒவ்வொரு நாளையும் எதிர்கொண்டு வருகிறேன் என்றும் கூறியிருந்தார். கூடிய விரைவில் நான் முழுமையாக குணமாகி இந்திய அணிக்காக நிச்சயமாக விளையாடுவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய நடராஜன், காயம் காரணமாக தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது. கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி அவருக்கு நன்றாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

Similar News