இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளிடையே நடந்த பகல்/இரவு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது !
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளிடையே நடந்த பகல்/இரவு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கராரா ஓவல் மைதானத்தில் நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. அணி பந்துவீச... இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 377 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மந்தனா 127, தீப்தி 66 ரன் விளாசினர். 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்திருந்த ஆஸி. அணி, நேற்று 9 விக்கெட் இழப்புக்கு 241 என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. பெர்ரி 68*, கார்ட்னர் 51 ரன் எடுத்தனர்.
இதையடுத்து, 136 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷபாலி 52, மந்தனா 31, பூனம் ராவுத் 41* ரன் விளாசினர். 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்த நிலையில், ஆட்டம் டிரா ஆனது. மந்தனா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். ஒருநாள் தொடரை ஆஸி. 2-1 என கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி கராராவில் அக். 7ம் தேதி நடக்கிறது.