தென் ஆப்பிரிக்காவில்தான் புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில். இந்திய அணியைத் தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்தார், "தென் ஆப்பிரிக்கத் தொடர் ரத்தாகுமா என்பதை இப்போதே கூற இயலாது. ஆனால், இந்திய அணியைத் தென் ஆப்பிரிக்கா அனுப்பும் முன் பிசிசிஐ மத்திய அரசிடம் ஆலோசித்து அனுமதி பெற்றே அனுப்ப வேண்டும்.
ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவில்தான் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. எங்கு கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறதோ அங்கு இந்திய அணியை விளையாட அனுப்புவது சரியான முடிவாக இருக்காது. பிசிசிஐ ஆலோசிக்கும்போது, இதுபற்றி விரிவாகப் பேசுவோம்" என்றார்.