ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 124 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 121 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2-வது இடத்திலும், 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளன.
இச் செய்தி இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Image : TOI