இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சாதனையை பாராட்டி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியில் சேருவதற்கான உத்தரவை அதிரடியாக வெளியிட்டுள்ளது.
#JUSTIN : இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
— Thanthi TV (@ThanthiTV) May 27, 2022
* பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேர்வார் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு #Praggnanandhaa | #IndianOil | #Chess pic.twitter.com/v1hWlL39hR
இந்திய நாட்டையும், தமிழகத்தை சேர்ந்தவர் பிரக்ஞானந்தா. இவர் 11ம் வகுப்பு படித்து வருகின்றார். வீட்டில் இருந்தபடியே படித்துக்கொண்டிருந்த போது கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைனில் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் 8வது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 16 வயதான பிரக்ஞானந்தா தோற்கடித்து மிகப்பெரிய சாதனை படைத்தார். இதனால் இந்தியாவின் மிக மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை கவுரவிக்கும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது. அதாவது பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேர்வார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Source: Twitter
Image Courtesy: The Economic Times