தேசிய வில்வித்தை போட்டியில் சென்னை சிறுமிக்கு தங்கம்!

Update: 2022-05-30 13:12 GMT

ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்று வரும் தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை சிறுமி தங்கம் வென்று சாதித்துள்ளார்.

தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான வில்வித்தை போட்டிகள், அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லூரியில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர். அதே போன்று ஐ.சி.எப்.பில் உள்ள தயான்சந்த் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 15 வயது சிறுவர், சிறுமியர் பங்கேற்று சிறப்பாக விளையாடி தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், ஆந்திராவில் தேசிய அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 23ம் தேதி தொடங்கியது. இதில் சென்னையைச் சேர்ந்த 15 சிறுவர் மற்றும் சிறுமியர்கள் பங்கேற்றனர். அதே போன்று அடையாறு கேந்திர வித்யாலயா பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த சங்கமித்ராவும் கலந்து கொண்டார். இவர் நேற்று (மே 29) 9 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தார். இப்போட்டிகள் இன்று நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News