தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீராங்கனை மற்றும் வீரர்கள் அசத்தியுள்ளனர். அதன்படி 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் கனிமொழி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சுரேந்தர் ஜெயக்குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். உயரம் தாண்டுதலில் பாரதி விஸ்வநாதன் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
சென்னையில் மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் 61வது சீசன் நடைபெறுகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில் தமிழக வீராங்கனை கனிமொழி அசத்தினார். அதன்படி இலக்கை 13.62 வினாடியில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த மவுமிதா மாண்டல் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு தமிழகத்தை சேர்ந்த தபிதா என்ற வீராங்கனை வெண்கலப்பதக்கத்தை வென்றார். மேலும், நந்தினி என்ற மற்றொரு தமிழக வீராங்கனை 5 வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar