இந்திய அணி வரும் 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பு இந்திய அணி பல்வேறு சொதப்பல்களை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக அந்த தொடருக்குப் பிறகு பல்வேறு சீனியர் கிரிக்கெட் வீரர்களை அணியில் இருந்து நீக்குவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களும் வந்து இருக்கிறது. ஆனால் அணியில் இருந்து பல்வேறு சீனியர்கள் நீக்கப்படாமல், புஜாரா மட்டுமே நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் தற்போது 18 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்காக களமிறங்கிய ரஹானேவுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கே.எல் ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின், வேறு யாரும் துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை. எனவே விரைவில் இந்திய அணியின் துணை கேப்டன் பதவி அஸ்வினுக்கு வழங்கப்படும் என்று பல்வேறு தரப்பிலிருந்து எதிர்பார்ப்புகளும் இருந்து வந்தன. ஆனால் இதற்கு BCCI எந்த ஒரு பதிலும் கூறாமல் துணை கேப்டன் பதவி இவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் மீண்டும் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாமல் ரஹானேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இம்முறை அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படும் என்ற ஒரு நம்பிக்கையில் பல்வேறு ரசிகர்கள் இருந்து வந்தார்கள். ஆனால் இப்போது அவருக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: News