இவரைப் பார்த்தால் எனக்கு சற்று பயம்தான்... முன்னாள் கேப்டன் கபில்தேவ் குறிப்பிட்டது யாரை?
ICC சமீபத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. அதில் அனைவரும் எதிர்பார்த்தபடி, உலகக்கோப்பை போட்டி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இது இந்தியாவிற்கு சாதகமாக அமைந்தாலும் தலைமை கேப்டன் பதவி முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த வகையில் இந்திய அணியின் துணை கேப்டன் பதவிக்கு தேர்வாக இருக்கும் வீரரை அனைவரும் சற்று கலக்கத்தில் தான் பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் கேப்டன் கபில்தேவ் விளையாட்டு வீரர்களுக்கு காயம் என்பது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக தான் இருக்கும். ஹர்திக் பாண்டியாவை பார்த்தால் தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. அவர் விரைவில் காயம் அடைந்து விடுகிறார். நமது வீடவர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் மட்டும்தான் இந்திய அணி ஒரு பலம் வாய்ந்த அணிக்காக இருக்கும் அந்த வகையில் துணை கேப்டன் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் வீரரை சற்று பயத்துடன் தான் நான் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடர் என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருகிறது. எனவே நீங்கள் அதற்காக தயாராக இருக்க வேண்டும். உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் மற்ற நாட்டு வீரர்களை எதிர்கொள்ளும் அளவிற்கு அதற்கேற்ற வகையில் நீங்கள் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். எனவே டி20 போன்ற தொடர்களை சற்று தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும் என்று கபில்தேவ் வலியுறுத்தியுள்ளார்.
Input & Image courtesy: News