உலக கோப்பை போட்டியா அல்லது ஆசிய விளையாட்டு போட்டியா... எதில் இந்தியா அணி பங்கேற்கும்...

Update: 2023-07-02 09:43 GMT

இந்தியாவின் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி விமர்சியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது 19-வது ஆசிய கிரிக்கெட் போட்டி சீனாவில் வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தற்போது ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் ஆட்டம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப் பட்டதன் காரணமாக இந்திய அணி இதில் பங்கேற்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்து இருக்கிறது.


ஆசிய விளையாட்டு சமயத்தில் தான் இந்தியாவில் தற்பொழுது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது ஆசிய கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க இந்திய அணி தயாராக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். எனவே இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இரண்டாம் தர கிரிக்கெட் அணியை அனுப்ப இந்தியா கிரிக்கெட் பாரின் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


இது அணியின் கேப்டனாக இடது கை தொடக்க ஆட்டக்காரர் ரிஷப் தவானும், பொறுப்பு தலைமை பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவரான லட்சுமணனும் நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்து இருக்கிறார்கள். தற்பொழுது 2010, 2014 ஆம் ஆண்டுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி அனுப்பப்படவில்லை. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் என்று தெரிய வருகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News