உலக கோப்பை போட்டியில் பங்கேற்குமா பாகிஸ்தான்... இறுதி முடிவு என்ன?

Update: 2023-07-10 04:52 GMT

இந்தியாவில் தற்போது 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் பிரம்மாண்ட முறையில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் இந்த போட்டிகள் தொடங்கி இருக்கிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கிறது.


இதில் பாகிஸ்தான் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா வருகை தர வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் தங்கள் அணி பங்கேற்காது, அவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு சாக்கு போக்குகளை கூறி வருகிறார்கள். எனவே இதற்கான அட்டவணையில் வெளியீட்ட பிறகும் கூட பாகிஸ்தான் அணி பங்கிற்குமா? என்று தற்போது ஆராய்ச்சி செய்ய உயர்மட்டக் கமிட்டி அமைப்பு முடிவு செய்து இருக்கிறது.


குறிப்பாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்திய செல்ல அனுமதி கேட்ட அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தரப்பில் பாகிஸ்தான் அரசுக்கு கடந்த வாரம் கடிதம் வழங்கியது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் முதல்வர் சபாஷ் ஷெரிப் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு குறித்து எல்லா அம்சங்களையும் ஆராய்ச்சி செய்ய உயர்மட்டக் கமிட்டி ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். ஆனால் இந்திய செல்வது குறித்து முடிவு இன்னும் உறுதியாக எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News