உலக இளையோர் வில்வித்தை போட்டி... இந்திய வீரர் தங்கம் வென்ற சாதனை...

Update: 2023-07-12 04:50 GMT

உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தற்பொழுது அயர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கு 21 வயதிற்குட்பட்ட ஆண்கள் தனிப்பிரிவில் பல்வேறு நபர்கள் போட்டியிட்டனர். குறிப்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள்.


இந்த போட்டியில் முடிவில் இறுதியில் இந்திய வீரர் பாரத் சாலும்கே என்பவர் ஏழுக்கு மூன்று என்ற கணக்கில் தென் கொரியாவில் இன்சுல் சோங் என்ற வீரரை வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் சேர்ந்த 19 வயதான இவர் உலக இளையோர் வில்வத்தை போட்டியில் தனிநபர் பிரிவில் சாம்பியன்ஸ் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை தற்பொழுது படைத்து இருக்கிறார்.


இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்து இருக்கிறது. குறிப்பாக இதன் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை வெண்கலம் பதக்கம் பெற்று இருக்கிறார். இந்த போட்டியில் இந்தியா ஆறு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கடத்துடன் மொத்தம் 11 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பெற்று இருக்கிறது. முதல் படியாக தென்கொரியா ஆறு தங்கம், நான்கு வெள்ளி, ஒரு வெண்கலம் என 11 பதக்கங்களை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News