இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த வீரராக விளங்கும் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது என்பது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் ஏன் அவர் இடம்பெறவில்லை என்பது தொடர்பான பதிவுகளும் அப்பொழுது சமூக ஊடகங்களில் உலா வந்தது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அஸ்வினுக்கு முன் உரிமை வழங்கப்படும் என்று தெரிகிறது.
திறமை உள்ள உறுப்பினருக்கு ஏன் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்று பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்த பிறகு தற்பொழுது அஸ்வினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்திய அணி இந்த நிலையில் அஸ்வின் அவர்கள் மகத்தான ஒரு சாதனையை எதிர்நோக்கு இருக்கிறார். இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 474 விக்கெட்களையும்,113 ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடி 151 விக்கெட்டுகளையும், 65 டி20 கிரிக்கெட்டில் விளையாடி 72 விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார்.
இதன் மூலம் ஒட்டு மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் 270 போட்டிகளில் விளையாடி 697 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
Input & Image courtesy: News