ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் அவர்கள் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் மேல் வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற சாதனையில் அவர் படைத்து இருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா கலந்து கொள்ளும் இறுதி ஆட்டத்தின் போது அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறாதது அனைவரையும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இது பற்றி அவர் கூறும் பொழுது, "துரதஷ்டவசமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆடும் லெவலில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் மனம் வருத்தம் அடையவில்லை. இறுதிப் போட்டிக்கு நான் எல்லா வகையிலும் தயாராக இருந்தேன். அதேசமயம் களம் காணும் லெவல் அணிக்கு தேர்வு செய்யப்படாவிட்டாலும் ஏமாற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்று மனரீதியாக என்னை தயார் படுத்தி இருந்தேன்.
ஒரு கிரிக்கெட் வீரனாகவும், ஒரு மனிதராகவும் உச்சத்தை தொட்ட எவரும் வீழ்ச்சியையும் சந்திக்காமல் இருந்தது இல்லை. சரிவுகளை நாம் சந்திக்கும் பொழுது தான் அது உங்கள் வாழ்க்கையை மீண்டும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துக் கொள் செல்கிறது. அது பற்றி புகார் கூறலாம் அல்லது வீழ்ச்சியிலிருந்து பாடம் நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். இதுதான் நான்" என்று மனம் திறந்து இருக்கிறார்.
Input & Image courtesy: News