சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் முக்கிய சாதனை.. குவியும் பாராட்டுக்கள்..
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆக விராட் கோலி இருந்து வருகிறார். இவருக்கு இந்திய அளவில் மட்டுமல்லது உலக அளவில் பல்வேறு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டாவது டெஸ்ட் நேற்று நடைபெற்ற முடிந்து இருக்கிறது. இந்த ஒரு தொடரில் தான் விராட் கோலி முக்கியமான சாதனையை படைத்து இருக்கிறார். மேலும் இந்த சாதனையை படைத்ததற்காக பல்வேறு தரப்புகளில் இருந்து இவருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
நேற்று 34 வயதான விராட் கோலி அவர்கள் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அடியெடுத்து வைத்தார். இதுவரை தற்பொழுது அவர் 116 டெஸ்ட் மற்றும் 274 ஒரு நாள் போட்டி மற்றும் 112வது 20 ஓவர் போட்டிகளில் விளையாடி அசத்தியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இவர் நுழைந்து தற்போது 15 ஆண்டுகள் நிறைவாகி இருக்கிறது. ஏறக்குறைய இந்த 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டின் வழி ஆடிவரும் விராட் கோலிக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த ஒரு சாதனை நிகழ்வுக்காக மிகவும் சிறப்பாக பாராட்டி இருக்கிறார்.
அப்படி என்ன சாதனை படைத்து இருக்கிறார் என்றால் இளம் வீரரான விராட் கோலி தற்பொழுது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எண்ணிக்கையை 500 எட்டியது. ஏறக்குறைய 13 ஆண்டுகளின் கிரிக்கெட் களத்தில் இருக்கிறார், 500 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகிறார் என்றால் அதற்கு எவ்வளவு பின் முயற்சிகளை அவர் செய்திருக்க வேண்டும் என்பதையும் நமக்கு நினைவு படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: News