உலக கோப்பைக்கு நாங்கள் தயாராகி விடுவோம்.. கேப்டன் ரோகித் சர்மா சொன்ன சீக்ரெட்..

Update: 2023-07-28 01:57 GMT

உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. ஏற்கனவே இந்திய அணி பல்வேறு போட்டிகளில் தொடர்ச்சியான வகையில் தற்போது பங்கேற்று வருகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் பலன்கள் மற்றும் பலவீனங்கள் குறித்து இந்திய கேப்டன் நன்கு ஆராய்ந்து இந்திய அணியை எந்த மாதிரியான ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா தீவிரமாக ஆலோசத்து வருகிறார்.


இதுதொடர்பாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக 10 முதல் 12 ஒருநாள் போட்டிகளில் நாங்கள் விளையாட இருக்கிறோம். இந்திய அணி எந்த மாதிரியாக விளையாட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.


யார் யாருடன் காம்பினேஷனில் சரியாக விளையாட முடியும் மற்றும் உலகக்கோப்பை காண திட்டங்களை இந்திய அணி தொடங்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் உலகக் கோப்பைக்கான திட்டங்களையும் இந்த போட்டிகள் மூலம் உருவாக்க முடியும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News