ரோகித், கோலிக்கு ஓய்வு கொடுக்கப் பட்டதால் தான் இந்தியா தோற்றதா.. இங்க பிளானே வேற..

Update: 2023-08-01 02:17 GMT

வெஸ்ட் இண்டிங்ஸ்க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முன்னணி கிரிக்கெட் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களுக்கு ஓய்வு மற்றும் பேட்டிங் வரிசையில் மொத்தமாக இந்திய அணி மாற்றி இருக்கிறது. எனவே இந்திய அணியின் இந்த மாற்றத்தின் காரணமாக தான் தோல்வி அடைந்து இருக்கிறது என்று பல்வேறு தரப்புகளில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களிடம பேசினார். அப்பொழுது அவர் குறிப்பிடுகையில், ஆசிய கோப்பை மற்றும் உலககோப்பை என முக்கியமான தொடர்கள் அடுத்தடுத்த மாதங்களில் வர இருக்கிறது.


எனவே அதற்கு முன்பு இளம் வீரர்களை வைத்து நாங்கள் இந்த தொடரை பரிசோதிப்பதற்கான கடைசி வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது. எனவே காயமடைந்துள்ள சில முக்கிய வீரர்கள் மற்றும் முழு உடல் தகுதி எட்டுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் முழுமையாக குணம் அடைந்து அணிக்கு திரும்பி விட்டார். பிரச்சினைகளை ஒருவேளை ஆசிய கிரிக்கெட்டுக்கு முன்பாக உடல் தகுதி எட்டவில்லை என்றால் நாங்கள் மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.


எனவே அதற்காக பரிசோதனை நான் தற்போது இளம் வீரர்களை களமிறங்கி இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். அது மட்டும் கிடையாது தற்போதைய சூழ்நிலையில் ரோகித், விராட் கோலி ஆகியோர் அணியில் நீடிக்கும் போது மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் சிரமம் இருப்பதால் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தோம். ஒரு சில போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்தால் கவலை இல்லை, எங்களுடைய இலக்கை உலக கோப்பை போட்டிக்கு வலுவான அணியை உருவாக்குவது தான் என்று கூறியிருந்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News