கேலோ இந்தியா திட்டம்.. பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்..

Update: 2023-08-03 06:40 GMT

நாடு முழுவதும் விளையாட்டை மேம்படுத்துவதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் விளிம்புநிலை விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் சமமாக பூர்த்தி செய்கின்றன. இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் விளையாட்டு பயிற்சி மையங்கள் ஆகியவை இந்தத் திட்டங்களாகும். இந்தத் திட்டங்களின் விவரங்கள் அமைச்சகத்தின் இணயைதளத்தில் கிடைக்கின்றன.


கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், "பெண்களுக்கான விளையாட்டு" என்ற பிரத்யேக உட்பிரிவு உள்ளது. இதில் பெண்களின் பங்கேற்பு குறைவாக உள்ள விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், கேலோ இந்தியா மகளிர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன, மேலும் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கான சிறப்புப் போட்டிகள் மூலம் 14 விளையாட்டுப் பிரிவுகளில் மொத்தம் 23,963 பேர் பங்கேற்கின்றனர்.


மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், தேசிய சிறப்பு மையத் திட்டத்தின் கீழ், காந்திநகரில் உள்ள தேசிய விளையாட்டு ஆணைய பிராந்திய மையத்தில் பாரா விளையாட்டுகளுக்கான சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் தடகளம், இறகுப்பந்து, வாள்வீச்சு, நீச்சல், பவர் லிப்டிங் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய பிரிவுகளில் செயல்படுகிறது. மேலும், அனைத்து தேசிய விளையாட்டு ஆணைய விளையாட்டு அரங்குகள் மற்றும் பயிற்சி மையங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக மாற்றப்பட்டுள்ளன.

Input & Image courtesy: News

Tags:    

Similar News