வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி.. முதல் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி..
பெர்லினில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்து இருக்கிறார்கள். குறிப்பாக இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில் இவர்களுடைய இந்த ஒரு சாதனை அமையப்பெற்று இருக்கிறது. குறிப்பாக இவர்களுடைய முதல் தங்கப் பதக்கம் வரும் போட்டிகளில் இந்தியாவிற்கு புது உத்வேகம் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்ற மகளிர் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் வென்று தந்த மகளிர்க்கு தன்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றும் உலக வில்வத்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இது போன்ற அனைத்து பெண்களும் வருங்காலத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
பெர்லினில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, "பெர்லினில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை நமது அற்புதமான மகளிர் அணி கொண்டு வந்ததால் இந்தியாவுக்கு பெருமையான தருணம். நமது சாம்பியன்களுக்கு வாழ்த்துக்கள்! அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்த சிறந்த முடிவுக்கு வழிவகுத்துள்ளது.
Input & Image courtesy: News