ரோகித் சர்மா தான் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டி.. இளம் வீரர் புகழாரம்...!
இந்தியா தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் எதிரான 20ஓவர் உலக கோப்பை தொடரில் தனது சர்வதேச பயணத்தை தொடங்கி இந்திய இளம் வீரர் திலக் வர்மா முதல் ஆட்டத்தின் போது 39 ரன்கள் மற்றும் இரண்டாவது ஆட்டத்தின் போது 51 ரன்கள் எடுத்து அனைவருடைய கவனத்தையும் எடுத்து இருக்கிறார். ஆந்திராவில் சேர்ந்த 20 வயதான இவர் தன்னுடைய பேட்டியின் போது, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை புகழ்ந்து பேசி இருக்கிறார். அதாவது இது பற்றி இவர் கூறும் பொழுது எனது இரு ஐ.பி.எல் தொடர் மும்பை அணிக்காக ஆடினேன்.
நான் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை என்பது அதுதான் என்பது தெரியும். நான் இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை காரணம். அதில் பெற்ற நம்பிக்கையுடன் தற்போது சர்வதேச போட்டியில் விளையாடுகிறேன் எனது முதல் ஐ.பி.எல் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா நீ மூன்று வடிவிலான போட்டிக்குரிய வீரர் என்று சொன்னார். அவர் அந்த வார்த்தை எனக்கு பெரிய ஊக்கத்தை அளித்தது, அதன் பெயரில் நான் தொடர்ச்சியாக முன்னேறினேன். தற்போது சர்வதேச போட்டிகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் அவர் வழிகாட்டியாக இருக்கிறார்.
அவரிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் எனது முதலாவது சர்வதேச போட்டியின் அரை சதத்தை ரோகித் சர்மாவின் மகள் சமைராவுக்கு அர்ப்பணிக்கும் வகையில் தான் களத்தில் அவளுக்கு பிடித்த மாதிரி சைகைகளை காட்டினேன். சமைராவுடன் நான் எப்பொழுதும் ஜாலியாக விளையாடுவேன். அப்போது எனது முதல் சர்வதேச அல்லது அரை சதத்தை அவளுக்கு சமர்ப்பிப்பேன் என்று கூறிந்தேன். அதன்படியே தற்போது செய்திருக்கிறேன் என்று கூறினார்.
Input & Image courtesy: News