உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. பாகிஸ்தான் அணி இந்தியாவில் பங்கேற்குமா?

Update: 2023-08-09 04:13 GMT

இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. சுமார் 10 அணிகள் இடையிலான 13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறது. அக்டோபர் முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை 10 நகரங்களில் இந்தியாவில் இந்த போட்டி வெகு விமர்சியாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் மிகவும் முக்கிய எதிர்பார்ப்புகுரிய இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது.


என்னதான் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டாலும் ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் தற்போது வரை பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெறும் மாற்றத்திற்கு பங்கிற்குமா? என்ற தன்னுடைய முடிவை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாக இருக்கிறது. அதாவது ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தால் அதை காரணம் காட்டி தங்களுக்குரிய ஆட்டங்களை அண்டை நாட்டுக்கு மாற்றும்படி பாகிஸ்தான் வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது.


இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து விளையாடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நேற்று அனுமதி வழங்கி இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் வலியுறுப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் விளையாட்டு அரசியலுடன் கலக்கக்கூடாது என்ற தங்களது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். எனவே வரும் உலக கோப்பை போட்டியில் எங்கள் அணி இந்தியாவிற்கு அனுப்புவதற்கு முடிவு செய்து இருக்கிறோம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News