இளைஞர்களின் சக்தியை சரியாக வழி நடத்தும் இந்தியா.. உலகமே திரும்பிப் பார்க்கும் நிலைமை..
இன்றைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களை திறம்பட எதிர்கொண்டு அவற்றை வெற்றி காண்பதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி, சென்னையில், யுனிசெஃப் சார்பில் இளைஞர்களின் தாக்கம் குறித்தான கருத்தரங்கு நடைபெறுகிறது.
கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கடந்த 23 ஆண்டுகளாக இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ந்தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்களை அதிகமாக கொண்டுள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. இளைஞர்களிடம் அளவிடமுடியாத ஆற்றல் குவிந்து கிடக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்தி, நாட்டுக்கும், உலகிற்கும் உரிய பங்களிப்பை இளைஞர்கள் வழங்க வேண்டும். இந்த ஆண்டின் கருப்பொருள் மிகப் பிரம்மாண்டமான உள்ளது என்று கூறினார். உலக அளவிற்கு இந்திய இளைஞர்களின் பங்களிப்பு திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இன்றைய உலகில் இளைஞர்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவற்றை கூட்டு முயற்சியின் மூலம் வெல்ல முனைய வேண்டும். இதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமாகும் என்று கூறிய அவர், இமாச்சலப் பிரதேசத்தில், தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதில் மிக இளம் வயதில், தாம் ஆற்றிய பங்கு பற்றி குறிப்பிட்டார்.
Input & Image courtesy: News