மீண்டும் உலக கோப்பை தொடரில் குழப்பமா.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. .

Update: 2023-08-21 07:35 GMT

இந்தியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணை ஜூன் மாத இறுதியில் மும்பையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. குறிப்பாக இந்த அட்டவணையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்கி ஆட்டம் நவம்பர் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் நவராத்திரியின் கொண்டாட்டத்தின்போது வருவதால் அந்த ஒரு ஆட்டம் மாற்றி வேறொரு நாளிற்கு மாற்றப்பட்டது.


மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 9 மைதானங்களிலும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்.15ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இறுதியாக அக்டோபர் 14ஆம் தேதி இந்த ஆட்டம் நடைபெறும் என்றும் இந்திய பாகிஸ்தான் போட்டி இல்லாமல் 9 போட்டிகளில் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு தற்போது இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


ஏற்கனவே இரண்டு முறை ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தார்கள். தற்போது மீண்டும் தேதி நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது. அதில் இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் ஐதராபாத்தில் அக்.12ஆம் தேதி நடக்கவிருந்த பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம், அக்.10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News