ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை..
இந்தியாவில் உலககோப்பை கிரிக்கெட் மிகவும் பிரமாண்டமாக நடைபெறுகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீரர்கள் மட்டுமல்லாது இந்திய ரசிகர்களும் பெரும் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அல்லாத மற்ற ஆட்டங்களுக்கான கிரிக்கெட் விற்பனை நேற்று முன் தினம் தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19 தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
இதில் முதல் ஆட்டம் நரேந்திர மோடி தேடியதில் நடக்கும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை தவிர்த்து மற்ற அணிகள் மூலம் 36 லீக் ஆட்டங்கள் மற்றும் இந்தியா அல்லாது 8 பயிற்சி ஆட்டங்கள் ஆகியவற்றிற்கான டிக்கெட் ஆன்லைன் விற்பனை நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கியது. தொடஙகிய உடனே பல்வேறு ரசிகர்களும் ஆவலுடன் டிக்கெட் வாங்குவதற்கு முன் வந்தார்கள்.
குறிப்பாக ஒரே சமயத்தில் டிக்கெட் வாங்க முயற்சித்ததால் 30-40 நிமிடங்கள் ஆன்லைன் இணையதளம் முடங்கிப் போனது. இதனால் டிக்கெட் வாங்க ஆர்வமுடன் காத்திருந்த பல்வேறு ரசிகர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. ஒரே சமயத்தில் பல்வேறு தரப்பிலிருந்து அணுகப்பட்டதன் காரணமாக இந்த ஒரு நிகழ்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டிக்கெட்டின் அதிகபட்ச விலை 1500 முதல் 6000 வரை விற்கப்படுகிறது.
Input & Image courtesy: News