உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி.. தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து..

Update: 2023-08-29 04:52 GMT

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்றிரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று நடந்தது. இறுதி களத்தில் 12 பேரில் 3 இந்தியர்கள் இருந்ததால் ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் உற்றுநோக்கினர். இந்தியாவில் இருந்து நீரஜ் சோப்ரா அவர்களும் இந்த ஒரு விளையாட்டு கலந்து கொண்டு இருப்பதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் எழுந்தது.


நீரஜ் சோப்ராவின் பதக்கம், உலக தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது பதக்கமாக அமைந்தது. இதற்கு முன்பு இதே நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு வெள்ளிப்பதக்கமும், 2003-ம் ஆண்டில் அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலமும் வென்று இருந்தனர். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது, "திறமையான நீரஜ் சோப்ரா சிறந்து விளங்குகிறார். அவரது அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த விளையாட்டு உலகிலும் ஈடு இணையற்ற சிறந்த வீரருக்கான அடையாளமாக ஆக்குகிறது. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News