பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை பாராட்டிய விராட்கோலி.. அப்படி என்ன நடந்தது..
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி மோதவுள்ள ஆட்டத்தை காண்பதற்காக சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முந்தி இருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேபாளம் அணிக்கு எதிராக 151 ரன்களை விளாசி இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் கிடையாது இவருடைய இந்த ஒரு ஆட்டத்தை விராட் கோலி பாராட்டு இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, பாபர் அசாம் என்னை சந்தித்த முதல் நாளில் இருந்தே அவ்வளவு மரியாதையை காண்கிறேன். அது இன்றும் மாறவில்லை. மூன்று வடிவங்களுக்குமான கிரிக்கெட்டிலும் சிறந்த பேட்ஸ்மேனாக பாபர் அசாம் இருக்கிறார், சீராக ரன்கள் சேர்த்து வருகிறார்.
அவரின் ஆட்டத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தாமாக முன்னேறி ஆட்டத்தை கட்டமைத்து சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் என் மீது வைத்துள்ள மரியாதை அப்படியே இருக்கிறது. இப்படிப்பட்ட குணங்களை பற்றி வீரர்கள் கிரிக்கெட்டில் நீண்ட தூரம் பயணிப்பார்கள் என்றும் பாராட்டி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை பாராட்டியது அந்நாட்டு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
Input & Image courtesy: News