ரோஹித் சர்மா கூறிய ஆலோசனையில் தான் நான் சிறப்பாக விளையாடினேன் இஷான் கிஷன்.!

Update: 2021-03-16 12:15 GMT

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 2-வது டி-20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபார விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1-1 என்றகணக்கில் சமநிலையை அடைந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக துவக்க வீரர் இஷன் கிஷன் திகழ்ந்தார். 32 பந்துகளை சந்தித்தஅவர் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள்  56 ரன்களை அடித்து அசத்தினார்.அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து போட்டி முடிந்து அவரின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேட்டியளித்த இஷான் கிஷன் கூறுகையில் : முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடுவது என்பது எப்போதும் எளிதல்ல. மும்பை இந்தியன்ஸ் அணி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது.மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள ஏராளமான மூத்த வீரர்களுடன் நான் விளையாடியிருக்கிறேன். அவர்கள் எனக்கு நிறைய அறிவுரை கொடுத்து இருக்கிறார்கள். ரிவர்ஸ் ஸ்வீப் எப்போதும் நான் சிறப்பாக விளையாடுவேன். ஆனால் இம்முறை அப்படி விளையாடி அவுட்டானது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : டாம் கரன் வீசிய பந்தை சிக்சருக்கு அடித்தபோது இந்த போட்டியின் மீது எனக்கு நம்பிக்கை பிறந்தது.அவர் கூறியபடி நான் துவக்க வீரராக சிறப்பாக விளையாடினேன்.



நாட்டுக்காக விளையாடும்போது நமது நாட்டின் கொடி, இந்த ப்ளூ ஜெர்சி ஆகியவை இருக்கும் போது சற்று பதட்டமாகவே இருக்கும். இருப்பினும் இறுதியில் நாம் நமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதாக இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஆண்டு இஷான் கிஷன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

Tags:    

Similar News