மூன்றாவது போட்டியில் சூரியக்குமாரை நீக்கியது தவறு-கம்பீர் விமர்சனம்!

Update: 2021-03-18 09:15 GMT

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.இந்த வருடம் நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படும் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் இரண்டு மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது சமூக வலைதங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.


முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியின் தோல்விக்கான தங்களது காரணங்களை கூறி வருகின்றனர். அதே போல் மோசமாக விளையாடும் வீரர்களையும் முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்தநிலையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான நடப்பு டி.20 தொடர் குறித்து பல்வேறு விசயங்களை பேசி வரும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை எடுக்காத விராட் கோலியின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.


சூர்யகுமார்யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், "டி20 உலக கோப்பை நெருங்குகிறது. அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை வரும். இப்படியாக தொடர்ச்சியாக சர்வதேச தொடர்கள் இருக்கும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று மிடில் ஆர்டர் வீரர் ஒருவரை அணி செட்டப்பில் இணைக்க வேண்டியது அவசியம். சூர்யகுமார் யாதவிற்கு தொடர்ந்து 3-4 போட்டிகள் வாய்ப்பளிக்க வேண்டும். அவரை 3வது டி20 போட்டியில் ஆடவைக்காதது எனக்கே பெரும் வியப்பாகத்தான் இருந்தது என கம்பீர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News