இந்தியாவில் தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிராக டி-20 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு புறம் ரோட்செப்ட்டிலீக் என்ற பெயரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களை கொண்ட ஒரு டி-20 தொடர் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் இந்திய, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டிஸ் ஆகிய ஏழு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக செயல்பட்டு வருகின்றார்.
இந்திய அணியில் யுவராஜ் சிங், சேவாக், இர்பான் பதான், யூசுப் பதான், கைப் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில்இந்திய லெஜட்ன்ஸ் அணி நேற்று அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் லெஜன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் மற்றும் சேவாக் ஆகிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். சச்சின் டெண்டுல்கர் 65 ரன்களும் யுவராஜ் சிங் 49 ரன்களும் அடிக்க இந்திய 218 ரன்கள் சேர்த்தது. யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
அதை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணி 206 ரன்கள் மட்டுமே அடித்து இதை தொடர்ந்து இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய லெஜன்ட்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.