"இந்திய அணியில் ஹார்திக் பாண்டியாவின் இடத்தை உறுதி செய்ய வேண்டும்" - யார் சொல்றாங்க?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று டி-20 போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது டி-20 போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் தேர்வு மற்றும் செயல்பாடுகள் குறித்து பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா களம் இறங்கும் போஷிசன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது "ஹார்திக் பாண்டியா கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ஹர்டிக் பாண்டிய ஆறாவது இடத்தில் களம் இறங்கி அதிரடியாக விளையாடினார். ஆனால் தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் ஏழாவது இடத்தில் களம் இறங்குவதால் அவர் இரண்டாம் தர பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழல் பந்துவீச்சுகளை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது. அவர் கடைசி நேரங்களில் மார்க் வுட் மற்றும் ஆர்ச்சர் போன்ற முதல் தர பந்து வீச்சில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த முடியாத நிலை உள்ளது. ஆறாவது இடத்தில் களம் இறங்கும் போது சுழல் பந்து வீச்சை மற்றும் சாம் க்ர்ரன் போன்ற வீரர்களை எதிர்கொள்ள முடியும்" என கூறியுள்ளார்.