இங்கிலாந்து அணி வீரர் டெவிட் மாலன் வீராட் கோலி, பாபர் ஆஷாம் சாதனையை முறியடிப்பு.!

Update: 2021-03-21 10:30 GMT

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டியில் வெற்றி பெற்றூ 2-2 என்ற கணக்கில் சம்நிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


 இதனையடுத்துமுதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (64), சூர்யகுமார் யாதவ் (32), இறுதி அரை ஆட்டமிழக்காத விராட் கோலி (80) மற்றும் ஹர்திக் பாண்டியா (39) என களமிறங்கிய அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை மிக சரியாக செய்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 224 ரன்கள் குவித்தது.இதனையடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ஜேசன் ராய் டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார். இதன்பிறகு இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜாஸ் பட்லர் – டேவிட் மாலன் கூட்டணி எங்களுக்கும் அதிரடியா விளையாட தெரியும் என்பது போல் இந்திய அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். 130 ரன்கள் வரை ஈசியாக குவித்த இந்த கூட்டணியை புவனேஷ்வர் குமார் தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் பிரிக்கவே அடுத்தடுத்த களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 188 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


 இந்தநிலையில், இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் இதன் மூலம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.இந்திய கேப்டனான விராட் கோலி 27 இன்னிங்ஸிலும், பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 26 இன்னிங்ஸிலும் 1000 ரன்கள் அடித்திருந்ததன், தற்போது டேவிட் மாலன் வெறும் 24 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

Tags:    

Similar News