ஷர்துல் தாகூர் ரன்களை கொடுத்தாலும் விக்கெட்களை வீழ்த்தும் திறமை உள்ளது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து.!

Update: 2021-03-26 09:45 GMT

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று புனே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தனர். அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 317 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி இருந்தனர். இதில் ஷிகர் தவான் 98 ரன்கள், கோலி 56 ரன்கள், அறிமுக வீரர் குர்னால் பாண்டியா 58 ரன்கள்  மற்றும் கே எல் ராகுல் 58 ரன்கள் குவித்துள்ளனர்.


இதையடுத்து 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்து 251 ரன்கள் மட்டும் குவித்து தோல்வி அடைந்துள்ளது. இதில் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரின் பார்ட்னர்சிப்பை தவிர மற்ற அனைவரும் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தனர்.இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் சர்துல் தாகூர் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தார்.  இங்கிலாந்து அணி சார்பாக 94 ரன்கள் அடித்து அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை சர்துல் தாகூர் வீழ்த்தினார்.


இதையடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்தார்.சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது டுவிட்டரில் " சர்துல் தாகூரின் எக்னாமி ரேட் குறித்து கவலைப்பட வேண்டாம். அவர் முக்கிய விக்கெட்களை உரிய நேரத்தில் எடுத்து தருகிறார். இவர் ஒரு கேம் சேஞ்சர். ஷர்துல் தாகூர் இதைத்தொடர்ந்து இந்திய அணிக்காக செய்து வருவார்"  என்று பாராட்டியிருக்கிறார்.

Similar News