இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் புனே மைதானத்தில் நடைபெற்ற வருகின்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி அதே புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவண் 4 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் வீராட் கோலி நிலைத்து விளையாடி அரைசதம் வீளாசினார். ரோஹித் சர்மா 25 ரன்னில் அவுட் ஆக பின்னர் வீராட் கோலி 66 ரன்களில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் நிலைத்து விளையாடினர். கே.எல் ராகுல் சதம் வீளாச ரிஷப் பண்ட் 77 ரன்கள் குவித்தார். இந்நிலையில் இந்திய அணி 336 ரன்கள் குவித்தது. அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜெசன் ராய் மற்றும் பேஸ்ரோ இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
ராய் 55 ரன்களில் அவுட் ஆக பின்னர் வந்த ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி சதம் வீளாசினார் பேஸ்ரோ. ஸ்டோக்ஸ் 99 ரன்னில் அவுட் ஆகி ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். இந்நிலையில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.