மும்பையில் தீவிரபயிற்சியில் ஈடுபட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.!

Update: 2021-03-28 05:45 GMT

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுத்தல் காரணமாக இந்தியாவில் நடத்தப்படவில்லை. அதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய ஆறு மைதானங்களில் மட்டும் போட்டியை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதற்கான அட்டவணைகளையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயார் ஆகி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதற்கட்டமாக ஐந்து போட்டிகளை மும்பை மைதானத்தில் விளையாட உள்ளதால் சென்னையில் இருந்து அனைத்து வீரர்களும் மும்பை சென்றடைந்துள்ளனர்.


நேற்று முதல் சென்னை அணி மும்பையில் முதல் நாள் பயிற்சியை தொடங்கி உள்ளது. இந்நிலையில் சென்னையில் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பாப் டுப் ப்ளஸிஸ், உத்தப்பா போன்ற முக்கிய வீரர்கள் தனிமைபடுத்தலில் உள்ளனர். இந்திய அணியில் விளையாடி வரும் ஷர்துல் தாகூர் மற்றும் இங்கிலாந்து அணியில் சாம் க்ர்ரன், மோயின்‌அலி ஆகிய வீரர்கள் விரைவில் அணியில் நேரடியாக இணைய உள்ளனர்.

Similar News