மூன்றாவதுஒருநாள் போட்டியில்கடைசிஓவரில் திரில்வெற்றிபெற்றது இந்தியஅணி.!

Update: 2021-03-29 03:30 GMT

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 37 ரன்னில் அவுட் ஆக ஷிகார் தவண் 67 ரன்களில் அவுட் ஆகினார்.


அவரை தொடர்ந்து பின்னர் வந்த கேப்டன் வீராட் கோலி 7 ரன்னிலும் கே.எல் ராகுல் 7 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய அணியை மீட்டனர். பண்ட் 78 ரன்களும் ஹர்டிக் பாண்டிய 68 ரன்கள் அடித்து அவுட் ஆக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 329 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொதப்ப டெவிட் மாலன் அரைசதம் வீளாசினார்.


200/7 என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி ஒற்றை ஆளாக போராடி இறுதிவரை கொண்டு சென்றார் சாம் க்ர்ரன். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய சாம் க்ர்ரன் 95* ரன்கள் குவித்து கடைசி வரை இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்தார். கடைசி ஓவரில் நடராஜனின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆட்டநாயகனாக சாம் க்ர்ரன் தேர்வு செய்யப்பட்டார். 

Tags:    

Similar News