ரிஷப் பண்ட் இல்லாமல் இந்திய அணி இல்லை முன்னாள் இங்கிலாந்து வீரர் புகழாரம்.!

Update: 2021-03-29 11:30 GMT

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் பங்கேற்றது.கிரிக்கெட் உலகின் சாம்பியனாக வலம் வரும் இங்கிலாந்து அணியை இந்திய அணியால் அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்றே பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்திருந்தனர். அதுமட்டுமல்லாம ஜடேஜா, முகமது ஷமி, பும்ராஹ் போன்ற வீரர்களும் இந்த தொடரில் விளையாடாததால் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நிச்சயம் திணறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் ஒட்டுமொத்த கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி இந்திய அணி அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ளதற்கு, சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களே முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. ரிஷப் பண்ட், நடராஜன், ஷர்துல் தாகூர், வாசிங்டன் சுந்தர், பிரசீத் கிருஷ்ணா, சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் இந்திய அணிக்கு இந்த வெற்ற்டி சாத்தியமானது. இறுதி வரை நம்பிக்கையுடன் போராடும் இந்திய இளம் வீரர்களை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெகுவாக பாராட்டி வருகிறது. இதில் குறிப்பாக மற்ற வீரர்களை விட ரிஷப் பண்ட் முன்னாள் வீரர்கள் பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார்.


இந்தநிலையில், ரிஷப் பண்டின் பயம் இல்லாத ஆட்டம் குறித்து பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் இயன் பெல், , ரிஷப் பண்ட் இல்லாத இந்திய அணியை தன்னால் தற்போது யோசித்து கூட பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.இது குறித்து இயன் பெல் பேசுகையில், "ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் பார்ப்பதற்கே அருமையாக இருக்கும். அதிரடியாக மட்டும் விளையாடாமல் தேவைக்கு ஏற்ப பொறுமையாக விளையாடுவதும் ரிஷப் பண்ட்டின் மிகப்பெரும் பலமாக பார்க்கிறேன். ரிஷப் பண்ட் அடிக்கும் சில ஷாட்கள் தனித்துவம் மிக்கதாக உள்ளன. நிச்சயமாக தற்போதுள்ள சூழ்நிலையில் ரிஷப் பண்ட் இல்லாத இந்திய அணியை என்னால் யோசித்து கூட பார்க்க முடியாது. ரிஷப் பண்ட் பொறுப்பே இல்லாமல் விளையாடுகிறார் என்ற விமர்ச்சனத்தையும் ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூலம் உடைத்துவிட்டார். நிச்சயமாக எதிர்காலத்தில் ரிஷப் பண்ட் உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருப்பார். இது போன்ற திறமைகள் அரிதானது" என்று தெரிவித்துள்ளார்.

Similar News