வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இந்தியாவில் ஐபிஎல் 14வது ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதால் ஐபிஎல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு மோசமான ஆண்டாக அமைந்ததால் அதிலிருந்து மீண்டு மீண்டும் வெற்றிகரமாக திரும்ப சிஎஸ்கே அணி தற்போது அனைத்து அணிகளும் முன்னரே பயிற்சியையும் துவங்கியது.இந்நிலையில் சிஎஸ்கே அணி பெரும்பாலான போட்டிகளில் மும்பை மைதானத்தில் விளையாட இருப்பதால் அங்கு சென்று தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக புஜாரா முதல் முறையாக சிஎஸ்கே அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார்.
மேலும் அவர் இந்த தொடரில் விளையாடுவதற்காக மும்பையில் சிஎஸ்கே அணியுடன் வீரர்களுடன் இணைந்து பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.அவருடன் உத்தப்பா, கவுதம் என அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக புஜாரா டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்டு மேலும் அவரால் பெரிய ஷாட்டுகள் விளையாட முடியாது தடுத்தே விளையாடுவார் என்று பலரும் தங்களது கருத்துக்களை மனதில் வைத்திருக்கலாம்.ஆனால் தற்போது அவற்றை தகர்த்தெறியும் வகையில் புஜாரா பயிற்சியில் சிக்ஸர்களாக பறக்கவிட்டு பயிற்சி செய்யும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து பேசியுள்ள புஜாரா கூறுகையில் : களத்தில் நிற்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து விளையாடும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.