சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்.!

Update: 2021-04-01 07:00 GMT

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தினர்.


இதனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்ற ஆகவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறது.சிஎஸ்கே அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரரான ஜோஷ் ஹசில்வுட் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் இவர் தற்போது வெளியேறி இருப்பது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கிறது.தனது விலகல் குறித்து பேசிய ஹசில்வுட் "நான் கடந்த பத்து மாதங்களாக பயோ பப்புள் மற்றும் குரோன்டைனில் இருந்து வருகிறேன்.


இதனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் நேரம் செலவிட திட்டமிட்டு இருக்கிறேன். இதன்பிறகு நாங்கள் சில டி20 தொடரில் விளையாட இருக்கிறோம்.இதன்பிறகு டி20 உலகக்கோப்பை தொடரிலும் விளையாட இருப்பதால் என்னால் தொடர்ந்து பாய் பப்புளில் இருப்பது கஷடம்.மேலும் நான் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தயாராக இருக்க விரும்புகிறேன். இதன் காரணமாகவே நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்" என்றார்.

Tags:    

Similar News