சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் தோனியை புகழ்ந்த கிருஷ்ணாப்பா கௌதம்.!

Update: 2021-04-01 07:15 GMT

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தினர்.


இதனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்ற ஆகவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறது.அதற்காக ஏலத்தில்  ராபின் உத்தப்பா,  கிருஷ்ணப்பா கவுதம்,  மொயின் அலி போன்ற நட்சத்திர வீரர்களை தேர்வு செய்திருக்கிறது.  தற்போது இவர்கள் எல்லாம் அணியுடன் இணைந்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.9.25 கோடி செலவில் ஏலத்தில் எடுக்கப்பட்ட கிருஷ்ணப்பா கவுதம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசியிருக்கிறார். கிருஷ்ணப்பா கவுதம் பேசுகையில் "நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து இந்தாண்டு ஐபிஎல் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


நான் கடந்த சில வாரங்களாக அணி வீரர்களுடன் இணைந்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.  இங்கு நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். சிஎஸ்கே நிர்வாகம் உண்மையிலேயே சிறந்த நிர்வாகமாக உள்ளது. ஏனென்றால் வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இந்த நிர்வாகம் அறிந்து செயல்படுகிறது" என்றார். 

Tags:    

Similar News