சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் போட்டியில் இவர் இடம்பெற மாட்டார்.!

Update: 2021-04-02 10:00 GMT

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்தியா முழுவதும் ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுவதால் ரசிகர்களிடையே இந்த தொடர்பு பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடர் நடைபெற்றது.கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 இந்நிலையில் இந்த ஆண்டு சி.எஸ்.கே அணி கலவையான வீரர்களை தேர்வு செய்து புது தெம்புடன் களம் இறங்க தயாராகி உள்ளது.மேலும் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடாத சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அணியில் சிறப்பான ஆல்ரவுண்டர்கள் பலரும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சரியான அளவில் இருப்பதால் இம்முறை சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில்இந்த தொடருக்கான முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நெகிடி முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சென்னை அணியின் முதன்மை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஏனெனில் தொடர் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஏப்ரல் 5-ஆம் தேதி தான் லுங்கி நெகிடி சென்னை அணியுடன் இணைகிறார். அப்படி இணையும் போது அவரை ஏழு நாட்கள் குவாரன்டைனில் நாங்கள் இருக்க வைப்போம்.அதனால் சென்னை அணி பங்கேற்கும் டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். சென்னை அணியில் இடம் பிடித்த வீரர்கள் ஏற்கனவே இந்தியாவில் வந்து பயிற்சியை மேற்கொண்டிருக்க லுங்கி நெகிடி தாமதமாக வருவதால் குவாரன்டைனில் வைத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளது.

Tags:    

Similar News