14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு அணிகளின் வெளிநாட்டு வீரர்களும் தற்போது தனது அணியுடன் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் மொயின் அலி, சாம் கரன், டேவிட் மாலன், பென் ஸடோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் நாடு திரும்பாமல் அப்படியே தங்களது அணியுடன் இணைந்துக் கொண்டனர்.
மேலும், மற்ற நாட்டு வீரர்கள் ஒவ்வொருவராக இந்தியா வந்து அணியுடன் இணைந்து குவாரன்டைனில் ஈடுபட உள்ளனர்.தற்போது ஆஸ்திரேலியா வீரர் மற்றும் சன்ரைஸர்ஸ ஐதராபாத் அணியின் கேப்டனான டேவிட் வார்னர் இன்று இந்தியா வந்து இருக்கிறார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹைடனும் அவருடனும் இணைந்து இந்தியா வந்தடைந்துள்ளார். இவர்களை அடுத்து நியூசிலாந்து கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மனான கேன் வில்லியம்சனும் இந்தியா வந்துவிட்டார்.
இவர்களை சன்ரைஸர்ஸ ஐதராபாத் அணி சிறப்பாக வரவேற்று இருக்கிறது. மேலும், இவர்கள் வந்த செய்தியை ஐதராபாத் அணி தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது. இதில் எங்களது கழுகள் வந்துவிட்டது. மீண்டும் சொல்கிறேன், எங்கள் கழுகள் வந்துவிட்டது என்று வார்னர், வில்லியம்சன், பிராட் ஹைடன் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு இருக்கின்றனர்.