இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பல்வேறு புதிய கட்டுபாடுகளை விதித்தது பிசிசிஐ.!

Update: 2021-04-03 08:15 GMT

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கவுன்சில் (பிசிசிஐ) தற்போது புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் இந்தாண்டு ஐபிஎல் சீசனில் இருந்து கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.


பிசசிஐ அறிவித்த விதிமுறை என்னவென்றால் பவுலிங் அணி தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.போட்டி தொடங்கிய 90 நிமிடங்களுக்குள் முதல் இன்னிஸை முடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து மற்றொரு இன்னிஸை அடுத்த 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும் தங்களது பந்துவீச்சை 90 நிமிடங்களில் கண்டிப்பாக முடித்துவிட வேண்டும்.ஒருவேளை பவுலிங் அணி கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். இவர்களது இந்த விதிமுறைகள் வீரர்கள் மற்றும் அணி உரிமையாளர்கள் என அனைவருக்கு மிகப்பெரிய தொந்தரவாக இருப்பதாக கூறப்படுகிறது.


முதல்முறை 90 நிமிடத்தில் பந்துவீசி முடிக்க தவறினால் அணியின் கேப்டனுக்கு 12லட்சம் அபராதம்.இரண்டாவது முறையும் 90 நிமிடத்தில் பந்துவீசி முடிக்க தவறினால் அணியின் கேப்டனுக்கு 24 லட்சமும், அந்த போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது 25% சம்பளத்தில் இருந்து பிடிப்படும்.மூன்றாவது முறையும் 90 நிமிடத்தில் பந்துவீசி முடிக்க தவறினால் அணியின் கேப்டனுக்கு 30 லட்சமும் மற்றும் அடுத்த போட்டியில் விளையாட தடை. மேலும் அந்த போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு 12 லட்சம் அல்லது 50% சம்பளத்தில் இருந்து பிடிப்படும் என்று பிசிசிஐ கடுமையான விதிமுறைகளை விதித்து இருக்கிறது.

Tags:    

Similar News