ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9 ரசிகர் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது, இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்குகொள்ளும் வீரர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொரு அணியும் திணறிக் கொண்டுள்ளது.இதனால் மக்களின் இயல்பு நிலை மற்றும் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது,இதற்குமுன் இப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலையை கண்டிராத மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.
கடந்த மூன்று மாதங்களாக இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கொரோன தொற்றின் இரண்டாவது அலை மீண்டும் உலக அளவில் பரவத் தொடங்கியது. இதனால் மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக பிரபலங்கள் பலருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல கட்டுப்பாடுகள் தான் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு வீரர்களுக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய சச்சின் டெண்டுல்கர், பத்ரிநாத், யூசுப் பதான் போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கம் ஐபிஎல் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்கள் மத்தியில் பரவி துவங்கியுள்ளது.ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால், பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும், ஒவ்வொரு அணியின் நிர்வாகிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது.இந்நிலையில் அதனைத்தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர துவக்க வீரரான தேவ்தாத் படிக்கள்ளுக்கு கொரோன தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேவ்தாத் படிகள் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 9 ஐபிஎல் போட்டி தொடங்க உள்ளது இவரின் இழப்பால் பெங்களூரு அணிக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.