மோயின்‌ அலியிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை- சிஎஸ்கே ( சி.இ.ஓ)

Update: 2021-04-06 06:15 GMT

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தினர். இதனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்ற ஆகவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறது.


மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ள தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த முறை தங்கள் அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக ராபின் உத்தப்பா, மோயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் ஆகியோரை ஏலத்தில் எடுத்து இருக்கிறது.இந்நிலையில் 2021 காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அந்த அணி வெளியிட்டது, ராணுவ சீருடை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீருடை இரண்டையும் இணைத்து உருவான இந்த புதிய ஜெர்சியில் மாய்ன்ரா மற்றும் எஸ்என்ஜே 10000 என்ற பீர் கம்பெனியின் லோகோவும் இடம் பெற்றிருக்கிறது.இந்நிலையில் அந்த பீர் கம்பெனியின் லோகோவை நீக்குமாறு சென்னை அணி நிர்வாகத்திடம் மொயின் அலி வேண்டுகோள் விடுத்ததாகவும் அதை சென்னை அணி நிர்வாகம் ஏற்று அந்த லோகோவை நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதை பத்திரிகை நிருபர்களும் உறுதிப்படுத்திய நிலையில் சென்னை அணி நிர்வாகம் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று டைம்ஸ் -நவ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து.


அதில்சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரியப்படுத்திய அதாவது மொயின் அலி அப்படி எந்த ஒரு வேண்டுகோளையும் சிஎஸ்கே நிர்வாகத்திடம் முன்வைக்கவில்லை மேலும் எந்த ஒரு லோகோவும் ஜெர்சியில் இருந்து நீக்கப்பட வில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

Tags:    

Similar News