தோனிகிட்ட கத்துகிட்ட வித்தைய வைச்சே சென்னை அணியை வீழ்த்த போவதாக ரிஷப் பண்ட் பேட்டி.!

Update: 2021-04-07 03:00 GMT

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர்இந்த தொடரின் மூலம் கேப்டன் அவதாரம் எடுத்துள்ள் அதிரடி நாயகன் ரிஷப் பண்ட் இந்த தொடரில் ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் எப்படி செயல்படுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். அதிலும் குறிப்பாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளதால், இந்நாள் தோனி என அழைக்கப்படும் ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் தனக்கு குருவான தோனிக்கு எதிராக எப்படி செயல்படுவார் என்பதை பார்க்கவே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.


இந்தநிலையில், சென்னை அணியுடனான முதல் போட்டி குறித்து பேசியுள்ள ரிஷப் பண்ட், முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரை துவங்க பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.இது குறித்து ரிஷப் பண்ட் பேசுகையில், "கேப்டனாக எனது முதல் போட்டியே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக உள்ளது. இது நிச்சயம் எனக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என கருதுகிறேன். நான் தோனியிடம் இருந்து நிறைய விசயங்கள் கற்றுள்ளேன். அதே போல் ஒரு கிரிக்கெட் வீரராக எனக்கு சில அனுபவங்கள் இருக்கும், தோனியிடம் இருந்து கற்று கொண்டதையும், எனது சொந்த அனுபவத்தையும் வைத்து முதல் போட்டியை சந்திப்போம். சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் சில வித்தியாசமான வழிமுறைகளை பின்பற்ற உள்ளோம்" என்றார்.மேலும் பேசிய ரிஷப் ப் அண்ட், என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்திருக்கும் அணி நிர்வாகிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.


எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்தகட்டத்திற்கு செல்ல முயற்சிப்பேன். டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்வதற்கு என்னால் முடிந்த வரை போராடுவேன். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக ஒரு அணியாக நாங்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அணியின் ஒவ்வொரு வீரர்களும் 100 சதவீத பங்களிப்பை அணிக்காக கொடுத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது, கேப்டனுக்கும் இது போன்ற வீரர்காள் கிடைப்பது தான் முக்கியம்" என்றார்.

Tags:    

Similar News