ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ‌மும்பை அணியை வெறுத்து வாங்கிய டிவில்லியர்ஸ்.!

Update: 2021-04-10 05:45 GMT

ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரின் கடைசி பந்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் 48 ரன்களையும், மேக்ஸ்வெல் 39 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோன்று இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோற்று ஒரு மோசமான சாதனையை சந்தித்துள்ளது.


இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : கடந்த ஆண்டு நாங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தோம் அந்த வகையில் இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி. மும்பை போன்ற ஒரு வலுவான அணிக்கு எதிராக இந்த வெற்றி சிறப்பான ஒன்று. இந்த போட்டியில் எங்களது அணி வீரர்கள் அனைவருமே சிறப்பான பங்களிப்பை அளித்தனர். 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி என்பது அனைவரும் விளையாடிய ஒரு போட்டிக்கு கிடைத்த வெற்றியாகவே இருக்கிறது.

Tags:    

Similar News