பங்களாதேஷ் அணியை 131 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து அணி.!

Update: 2021-03-20 09:30 GMT

பங்களாதேஷ் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒரு நாள் போட்டி நியூசிலாந்தில் உள்ள டுடிரின் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.


 முதலில் களம் இறங்கிய பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் மற்றும் லிடன் தாஸ் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க பங்களாதேஷ் அணி வீரர்கள் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். முகமதுல்லா அதிகபட்சமாக 27 ரன்களை அடிக்க பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 131/10 ரன்கள் சேர்த்தது. இதை தொடர்ந்து நியூசிலாந்து அணியில் டிரன்ட் போல்ட் 4 விக்கெட்களை வீழ்த்தினர். சாட்னெர் மற்றும் நீஷம் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.


 பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் கப்தில் மற்றும் நிக்கோலஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் கப்தில் 38 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த கன்வே சிறப்பாக விளையாட நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

Tags:    

Similar News