இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்த ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் டி-20 போட்டி கடந்த 12ம் தேதி நடைபெற்ற நிலையில் அந்த போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி தர்ம அடி கொடுத்து முதல் டி-20 போட்டியில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜெசன் ராய் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 46 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக இங்கிலாந்து அணி 164-6 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய இந்தியா அணியில் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் கே.எல். ராகுல் இருவரும் களம் இறங்கினர்.
கே எல் ராகுல் டக்அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் வீராட் கோலி நிலைத்து விளையாட இஷான் கிஷன் 28 பந்தில் அரைசதம் வீளாசி அவுட் ஆனார். நிலைத்து விளையாடி வீராட் கோலி 73 ரன்கள் குவிக்க இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது.